சின்னக்கம்பாளையத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து

வீட்டிற்கு வெள்ளையடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டிற்கு வெள்ளை அடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் காயம் ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது சின்னக்கம்பாளையம். இப்பகுதியில் சக்திவேல் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரின் வீடும் ஒட்டி உள்ளது. இதில் சக்திவேல் என்பவர் தனது இடத்தில் இடைவெளி விடாமல் வீடு கட்டியுள்ளார்.

இவர் தான் கட்டிய வீட்டிற்கு வெள்ளையடிக்க அருகில் வசிக்கும் மதிவாணன் வீட்டு இடத்துக்குள் சென்ற சக்திவேலை பார்த்து உனது இடம் முழுவதும் வீடு கட்டி விட்டாய் எதற்கு என் வீட்டு வாசலுக்கு வந்தாய் என மதிவாணன் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் சார்பாக அவரது அண்ணன் கருப்புசாமி மற்றும் மகன் மதன்குமாரும், அதே போல மதிவாணன் சார்பாக தம்பி ரமேஷ் பாபு சேர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த மதிவாணன் தான் மறைத்து வைத்திருந்த சூரிகத்தியை எடுத்து சக்திவேல், அவரது அண்ணன் மற்றும் சக்திவேல் மகன் மதன் குமார் ஆகிய மூன்று பேர்களை கத்தியால் குத்தினார்.



அதில் பலத்த காயமடைந்து சக்திவேல் (55) அண்ணன் கருப்புசாமி (58) சக்திவேல் மகன் மதன்குமார் (18) ஆகிய மூவரும் பலத்த கத்தி குத்தி காயங்களுடன் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சம்பவத்தில் மூன்று பேர்களை கத்தியால் குத்திய மதிவாணன் மற்றும் இவரது தம்பி ரமேஷ்பாபு ஆகிய இரண்டு பேர்களும் தலைமறைவாயினர். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அண்ணன், தம்பியை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...