திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன போட்டி - 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கணபதிபாளையம் வி.ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.


திருப்பூர்: திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன சாட்சி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ மாணவிகள் பங்கேற்று தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.



திருப்பூர் அருகே கணபதிபாளையம் வி. ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த யோகாசன போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரை படிக்கும் மாணவ மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், அனைத்து வயதினர்கள் உள்ளடக்கிய பொது பிரிவு என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றன, இந்த யோகாசன போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர்.

இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் புதிதாக யோகாசனத்தை கற்க விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



இந்த யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த யோகாசன போட்டியானது முழுக்க முழுக்க குழந்தைகளின் திறனை மேம்படுத்த திறனாய்வு போட்டியாக நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...