உடுமலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை உடுமலை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். 4-வது வார்டு தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.



உடுமலை நகர பொதுச்செயலாளர் செல்வராஜ் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் திருச்சி முத்து செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலைவாணி மகளிர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...