செட்டிப்பாளையமத்தில் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - சீறி பாய்ந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் FMSCI எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதி போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில்நடைபெற்றது.



ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...