வால்பாறை அருகே வன பகுதிக்குள் மக்னா யானை உயிரிழப்பு - வனத்துறையினர் ஆய்வு

யானை பாறையில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும்,யானை இறந்து சில தினங்கள் கடந்து இருக்கும் எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் மக்னா யானை உயிரிழப்பு குறித்து வால்பாறை வனத்துறை மற்றும் பொள்ளாச்சி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.



கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட பகுதிகளில் விலைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோவை பகுதியில் விட்டனர்.

சில தினங்களாக வனப்பகுதியில் இருந்த மக்னா யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து விலைநிலங்களை சேதப்படுத்தியது, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு யானையை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் யானையை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

யானையை டாப்ஸ்லிப் யானைகள் முகாம் பகுதியில் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதிக்குள் விட்டனர். யானை சில தினங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சேத்துமடை சர்க்கார்பதி, சரளபதி, ஆனைமலை, கோவை போன்ற பகுதிகளில் சுற்றி குடியிருப்பு பகுதியில் சுற்றியது யானையை மீண்டும் வனத்துறையினர் பிடித்து மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற இடத்தில் யானையை விடுவித்தனர்.

யானை மீண்டும் சில தினங்களில் அதேபோல் ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை, சர்க்கார்பதி, சராளபதி போன்ற இடங்களில் விலைநிலங்களை சேதப்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்தி யானையை மீண்டும் பிடிக்க வலியுறுத்தினர். யானையை மீண்டும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் வனப்பகுதியில் விட்டனர். யானை சிறிது காலம் வால்பாறை சுற்றுவட்டாரத்திலே சுற்றி வந்தது.

வால்பாறை அருகே உள்ள சக்தி எஸ்டேட் வனப்பகுதியில் யானை நன்றாக உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்து வந்த நிலையில், நேற்று வால்பாறை வன சரகத்துக்கும் பொள்ளாச்சி வன சரகத்துக்கும் இடையில் உள்ள வன பகுதியில் யானை இறந்து இருப்பதாக வனப் பகுதிக்குள் ரவுந்த் பணிக்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனைமலை கல இயக்குனருடன் தெரிவித்தனர்.



இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் யானை பாறையில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது. யானை இறந்து சில தினங்கள் கடந்து இருக்கும் என்பது தெரியவந்த.



மேலும் இன்று உடல் கூறு ஆய்வுக்கு பின் மக்னா யானை இறந்தது குறித்து தெரியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...