தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை - தமிழக அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை நடைபெறும் நிலையில் தமிழக அரசை கண்டித்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறிப்பாக ஒரு சமூகத்தினரை படுகொலை செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து படுகொலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினர்.



தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுத்து எவ்வாறு கொலைகள் நடக்கிறது என்று ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...