விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் - பறிமுதல் செய்த பொள்ளாச்சி அதிகாரிகள்

இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விற்பனைக்காக லாரியல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில், விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்பட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில் நகராட்சி சுகாதார அலுவலர் சேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சி.டி.சி., மேட்டில் கோவையில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி பகுதியில் வினியோகம் செய்வதற்காக கோவையில் இருந்து, பிளாஸ்டிக் பேக், டம்ளர்கள், ஸ்பூன்கள், நான் ஓவன் பேக்ஸ், ஸ்ட்ரா போன்றவை கொண்டு வரப்பட்டன.

மொத்தம், 35 பண்டல்களில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத பொள்ளாச்சி நகராட்சியாக மாற்ற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...