உடுமலையில் மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கல்

தனியார் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இலவச எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இலவச எழுது பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு உதவித் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சின்னராசு வரவேற்பு உரையாற்றினர்.



பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா பூமாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...