மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய மணி என்பவரை கைது செய்து சிறையில் போலிசார் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணியூர் நல்லா போயன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகன் மகன் நாகராஜ்(39) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவருடன் கட்டிட வேலை செய்துவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் மிடாப்படியே சேர்ந்த கருப்பு சாமியின் மகன் மணி (43) என்பவர் நாகராஜனுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திரும்ப கேட்கும் பொழுது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாலை மணி என்பவர் நாகராஜ் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு அருகில் இருந்தவர்கள் வெட்டுப்பட்ட நாகராஜை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.



இது சம்பந்தமாக கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட மணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...