கோயமுத்தூரில் நகர் நல மையம் - ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

பழுதடைந்த நகர்நல மைய சுற்றுச்சுவரை சரிசெய்திட நாடாளுமன்ற உறுப்பினரும், மழை நீர் வடிகால் சேதமான குடிநீர் குழாய் பணிகளை உடனடியாக சீர் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளரும் உத்தரவு பிறப்பித்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள நகர்நல மையத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள நகர்நல மையத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்து, பழுதடைந்த நகர்நல மைய சுற்றுச்சுவரை சரிசெய்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்கள்.



அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தெற்கு குட்டையை புனரமைக்க உரிய மதிப்பீடு தயாரிக்க கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்கள்.



முன்னதாக, தெற்கு மண்டலம் வார்டு எண்.94க்குட்பட்ட சுந்தராபுரம், பூங்கா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவில் செய்து முடித்து சாலைப்பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்னர்,



அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட சுந்தராபுரம், ஹவுசிங்யூனிட் பேஸ்-1 பகுதியில் சாலை பணிகளை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



அப்பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.97-க்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி சாலைப்பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.98-க்குட்பட்ட சுந்தராபுரம், காந்தி நகர், எல்.ஐ.சி.காலனியில் சாலை பணிகளை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட காளப்பட்டி சாலை சுகுணா ஆடிட்டோரியம் மினி ஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.செல்வசுரபி, தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா தங்கவேல், ராமமூர்த்தி, உதயகுமார், மண்டல உதவி ஆணையர்கள் பிரேம் ஆனந்த், கவிதா, ஸ்ரீதேவி, உதவி நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், ஹேமலதா, எழில் உதவி பொறியாளர்கள் குமார், சதீஷ்குமார், சபரிராஜ், சுந்தர்ராஜன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...