கோவையில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த ஆ.ராசா - திமுக நிர்வாகிகளுக்கு நிதியுதவி

76 கோடி மதிப்பில் கூடலூர் நகராட்சிக்கு முழுவதும் குடிநீர் கொண்டு செல்லவுள்ள அம்ரூத் குடிநீர் திட்டவடிவத்தை ஆய்வு செய்தார். திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மிகவும் வயதான கட்சி நிர்வாகிக்கு ஆ.ராசா நிதியுதவி அளித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கோவை கூடலூர் நகராட்சியில் பொதுநிதி மற்றும் இதர திட்டத்தின் கீழ் இலகுரக வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கோவை கூடலூர் நகராட்சியில் பொதுநிதி மற்றும் இதர திட்டத்தின் கீழ் ரூ.403.75 லட்சம் மதிப்பில் வட்டப்பாறைப்புதூர், குறள் நகர், செல்வபுரம், ஸ்ரீ பாரதி நகர், கூடலூர் கவுண்டம்பாளையம், விஜயலட்சுமி நகர், ரோஸ்பார்க் அவென்யூ, முல்லை நகர், கணேசபுரம், லட்சுமி நகர், சாமிசெட்டிபாளையம், ஜி.டி.ரெசிடென்சி, காமராஜ் நகர், அம்பேத்கார் நகர் மற்றும் ராஜூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்படவுள்ள மழைநீர் வடிகால், சிறுபாலம், சிமெண்ட் கான்கிரீட் தளம், பேவர் பிளாக், கம்பி வேலி அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மேலும் தமிழகத்தில் முதன்முறையாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தானியங்கி குடிநீர் மேலாண்மை கட்டுப்பாட்டுக் கருவிகள் பொறுத்துதல், 10 பேட்டரி வாகனங்கள், 2 இலகுரக வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



மேலும் காரமடை சாலையை இணைக்கும் கட்டாஞ்சி மலையில் இருந்து பாரதி நகர் வரை புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும் சுமார் 76 கோடி மதிப்பில் கூடலூர் நகராட்சிக்கு முழுவதும் குடிநீர் கொண்டு செல்லவுள்ள அம்ரூத் குடிநீர் திட்டவடிவத்தை ஆய்வு செய்தார். முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு பொற்செல்வி என்று பெயர் வைத்தார். மேலும் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார்.



ஆணையாளர் மனோகரன், துனைதலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பாளர்களாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் கூடலூர் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகரமன்ற உறுப்பினர்கள் ரேவதி, சாந்தாமணி, சங்கீதா, மணிமேகலை, சித்ரா, ரம்யா, துரை செந்தில், பாலசுப்பிரமணியன், பேங்க் முருகேசன், வக்கீல் ஸ்ரீதர், மீனா கணேசன், வணிதாமணி, ஜானகி, ஈஸ்வரி, பொன்மாடசாமி, தவமணி, திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோனிராஜ், சோமையம்பாளையம், ஆனந்தகுமார், அலக்ஸ், பத்திரப்பன், சாலை வேம்பு குணசேகரன், தோலம்பாளையம் சரவணன், செல்வி, சுகந்தி, செல்வபுரம் பழனிசாமி, பணி மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...