கோவை மாவட்ட எல்லையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முத்தமிழ் தேருக்கு உற்சாக வரவேற்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்தி வலம் வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.


கோவை: கோவை மாவட்ட எல்லையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முத்தமிழ் தேருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேருக்கு பள்ளி குழந்தைகள் மலர் தூவி வரவேற்றனர்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாவட்டத்துக்கு வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்திக்கு பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்தி வலம் வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.



கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.



அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவி மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் துள்ளி குதித்து மலர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா வழங்கியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.



தொடர்ந்து முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...