உடுமலை அருகே அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தாக்குதல் - போதை வாலிபர்களுக்கு தர்ம அடி

இலவச டிக்கெட் கேட்டு புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது போதையில் இருந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பருத்தியூர் செல்லும் 33 எண் வழித்தட பேருந்தை பிராபரகர் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக குமார் இருந்த நிலையில் பருத்தியூர் சென்று விட்டு உடுமலைக்கு வரும் போது தேவனூர் புதூரில் மூன்று வாலிபர்கள் குடிபோதையில் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகின்றது.

அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர்கள் இலவசமாக தங்களை உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் நடத்துனர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பொதுமக்கள் உதவி உடன் நடத்துனர் சின்னபுதூர் பேருந்து நிறுத்தும் பகுதியில் கீழே இறக்கி விட்டதாக கூறப்படுகின்றது.



இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பேருந்து பின் தொடர்ந்து புங்கமுத்தூர் பிரிவில் பேருந்தை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லை கொண்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது சாரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.



பின்னர் பேருந்தில் இருந்த பொதுமக்கள் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.



பின்னர் காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் அங்கலக்குறிச்சியை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய ரஞ்சித் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் உடுமலை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மூன்று வாலிபர்கள் குடிபோதையில் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...