உடுமலை மூணாறு சாலையில் கரடி நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை

இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது. அதிக சத்தம் எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக மறையூர் காந்தலூர் மூணாறு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவு காணப்படுகின்றது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது, மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது.



அதிக சத்தம் எழுப்பக் கூடாது. மேலும் ஒரே இடத்தில் வாகனங்களை நீண்ட நேரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என உடுமலை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...