உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழுவினர் வருகை தந்து பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க பள்ளிகளில் உள்ள மாணவர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் விதமாக ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவினர் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று மாணவர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் இன்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அப்போது மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பருவ கால முன்னெச்சரிக்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...