உடுமலை அருகே நடந்த நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு சிகிச்சை முகாம்

நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் "நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்" பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல் இவ்விழாவை தலைமையேற்று நடத்தி நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார். அவர் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நாட்டின நாய்களை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார்.



திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் மண்டல நாட்டின நாய்கள் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.ரவிமுருகன் சிறப்புரை யாற்றினார். அவர் தம் உரையில் நாட்டின நாய்கள் நம் கலாச்சாரத்தோடு இணைந்துள்ளது என்பதை விவரித்தார். அம்மாபட்டி மற்றும் சாளையூர் கிராமத்தில் உள்ள நாட்டின நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் முறையே குமார் மற்றும் சாந்தகுமார் வாழ்துரை வழங்கி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் மருத்துவர் இன்பராஜ் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் உடுமலைப்பேட்டை மற்றும்அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவசவெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. இவ்விழாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...