பொள்ளாச்சி அருகே பரமக்குடியிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வளைவில் திரும்ப முயன்றபோது பஸ் மோதியதில், டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் பகுதியில் வளைவில் திரும்ப முயன்ற டிராக்டர் மீது 54 பயணிகளுடன் பரமக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு கோவை வழியாக பொள்ளாச்சி மாசாணியம்மன்கோவில் மற்றும் பழனிக்கு வந்த சுற்றுலாப் பேருந்தானது கோயமுத்தூர் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

பேருந்தில் பயணித்த 8 பேருக்கு சிறு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது. விபத்து காரணமாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...