கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது

கூடலூர் நகராட்சியின் 19 வார்டு முதல் 27வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கென நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.



கேஸ் கம்பெனி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மண்டல நகராட்சிகள் நிர்வாகத் துறை இணை இயக்குனர் மருத்துவர். இளங்கோவன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார். துணை தலைவர் ரதிராஜேந்திரன், ஆணையாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூடலூர் நகராட்சியின் 19 முதல் 27 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கென நடத்தப்பட்ட இதில் 20க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதனை கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேல் பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை வட்டாச்சியர் சாந்தாமணி, குடிசை மாற்று வாரிய அதிகாரி கருப்பு சாமி, நகரமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், கீர்த்தனா, சரண்யா, ஜானர்த்தனன், ரேகா, கவிதா ராணி, ராகுல், பொன்மாடசாமி, பாலசுப்பிரமணியன், துரை செந்தில், பேங்க் முருகேசன், தவமணி, மணிமேகலை, சாந்தமணி, உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், மேளாளர் குமார், காதார ஆய்வாளர் திருப்பதி, மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...