உடுமலையில் கோழி திருட வந்ததாக நினைத்து தாக்குதல் - நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

தாந்தோணி என்ற கிராமத்தின் அருகே உள்ள ஒரு பகுதிக்கு சென்ற நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரை, கோழி திருடுவதற்காக வந்துள்ளார் என நினைத்து, அவர்களின் கைகளை பின்புறமாக கட்டி வைத்து அப்பகுதியினர் இருவரையும் சரமாரியாக மரக் கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதில் செங்கோட்டயன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி ஊசி, பாசி, மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இக்குழுவைச் சேர்ந்த செங்கோட்டயன், குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தாந்தோணி என்ற கிராமத்தின் அருகே உள்ள ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, இந்த இரண்டு பேரும் கோழி திருடுவதற்காக வந்துள்ளார் என நினைத்து, அவர்களின் கைகளை பின்புறமாக கட்டி வைத்து இருவரையும் சரமாரியாக மரக் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் செங்கோட்டயன் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், செங்கோட்டனை ஏற்றுக்கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்றது.



அங்கு செங்கோட்டனையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து இன்று காலையில் உடுமலை அரசு மருத்துவமனையை முற்செங்கோட்டனின் உறவினர்களான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் கொலையாளிகளை உறுதியாக கைது செய்து விடுவோம் என உத்தரவாதம் அளித்தனர். மேலும் இவரது இறப்பு குறித்து பரிசோதிக்க இவரது உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி இறந்து செங்கோட்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பிரச்சினையால் உடுமலை அரசு மருத்துவமனையே போர்க்களம் போல் காட்சி அளித்தது. அப்பாவி மக்களை அடித்துக்கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களை தாக்கிய நபர்களை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...