ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயகட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது.


கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் மற்றும் பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

இதில் பழைய ஆயக்கட்டில் நெல் சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்த நெல் சாகுபடிக்கு ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக அரியபுரம், பெரியஅணை, பள்ளி விழங்கால் மற்றும் வடக்களூர் அம்மன் உள்ளிட்ட ஐந்து கால்வாய்களின் மூலம் அணையில் இருந்து தண்ணீர் சென்று பாசனப்பகுதிகளை சேர்கின்றன எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது பழைய ஆயக்கட்டு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெல் நாற்றுகள் முளைத்து வரும் நிலையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாய பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



அண்டை மாநிலமான கேரள மாநிலத்துக்கு தண்ணீர் தருவதை போல், எங்களுக்கும் தண்ணீர் தர வேண்டும் என கூறி ஆழியாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வராத நிலையில் அதிகாரிகளை கண்டித்தும், தண்ணீர் வழங்காததைக் கண்டித்தும், அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல் நிலைய போலீசார், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் கூறி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினர்.

ஆனால் விவசாயிகள் இங்கிருந்து கலைந்து செல்ல மட்டோம் எனக்கூறி நீர்வள அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வம் என கூறி காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...