சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கோவையில் துவக்கி வைக்கப்பட்டு தமிழகமெங்கும் சிறப்பாக செயல்பாட்டுவரும் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளைத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதற்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கி மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் சிறப்பாளர்களாக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் உத்தமன், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், துறை அதிகாரிகள் ஜெயகுமார், நித்யா, அமுதவள்ளி, அஸ்வீன்ராஜ், கிருபா, பிரேமா, தீனதயாளன், ராம்சாமி, ஸ்ரீதேவி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சின்னுராமகிருஷ்ணன், செந்தில்குமார், திமுக வட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...