கோவையைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலருக்கு அடல் கௌரவ் சம்மான விருது

அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் தீன்மூர்த்தி பவனில் உள்ள பிரதமர்கள் அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வான் கல்யாணசுந்தரத்திற்கு விருது, பதக்கம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.


கோவை: இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக சிறந்த பங்களிப்பை வழங்கியதிற்காக கோவையைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி செயலர் கல்யாணசுந்தரத்திற்கு அடல் பவுண்டேஷன் சார்பில் அடல் கௌரவ் சம்மான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அடல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக சிறந்த பங்களிப்பை வழங்கியோருக்கு அடல் கௌரவ் சம்மான விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

இந்த வருடம் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் கூடலூர் பேரூராட்சியின் முன்னாள் செயல் அலுவலரும், சமூக ஈடுபட்டாருமான கல்யாணசுந்தரம் இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார். இரு மாநிலங்களையும் சேர்ந்து இவர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்ந்து அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் தீன்மூர்த்தி பவனில் உள்ள பிரதமர்கள் அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்ற 3 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வான் கல்யாண சுந்தரத்திற்கு விருது, பதக்கம் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார்.

அப்போது தேசிய தகவல் தொடர்பு துறை ஆணையர் உதய் மகர்கர், மத்திய அமைச்சர்கள் ரஜேஷ் ஒஜா, பீம்லால் திவாக், ரமேஷ்குமார் கே.சுவாமி, மகேந்திரா பூஜி பூரா, அடல் பவுண்டேஷன் தலைவர் அபர்ணா சிங், தேர்வுக்குழுத் தலைவர் சுகந்தா சாகா மற்றும் பலர் உடனிருந்தனர். மேலும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 பேருக்கு அடல் சர்வதேச விருதும், தேசிய அளவில் 35 பேருக்கு அடல் கௌரவ் சம்மான விருதும் வழங்கப்பட்டது.

கல்யாணசுந்தரம் கோட்டூர் மலையாண்டிப் பட்டணம், அன்னூர், சிறுமுகை, காரமடை, கூடலூர் போன்ற பல்வேறு பேரூராட்சிகளில் செயல் அலுவலராகப் பணிபுரிந்தபோது மனநலப் பூங்கா, திடக்கழிவு மேலாண்மை மையங்கள், 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே இலவச ஆம்புலன்ஸ் சேவை, நவீன எரியூட்டு மைதானங்கள், நீராதாரங்களைப் பெருக்குதல், மரம் வளர்ப்பு, அரசு வருவாய் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், கொரோனா காலத்தில் 2 வாகனங்கள் மூலம் தினமும் 1000 நபர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் கோவில்கள் திருப்பணிகள் ஆகியவற்றிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து துடியலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு கருப்புசாமி தலைமை வகித்தார். ஐயப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பாளர்களாக பா.ஜ.க-வின் ராணுவப் பிரிவின் மாநிலப் பொதுச் செயாளர் பரமேஸ்வரன், ஆன்மிகப் பிரிவுப் பொறுப்பாளர் ஞானமூர்த்தி, கூடலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், கனகராஜ், ஸ்டாலின், செந்தில், கொங்கு பாலு, பழனிசாமி, வெங்குடுசாமி, முத்துலட்சுமி, புவனேஷ்வரி, சித்ரா, பூர்ணிமா, பத்மாவதி உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கல்யாண சுந்தரத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவர் காரமடை தமிழாசிரியர் தினேஷின் தமிழ் நாள் காட்டியை வெளியிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...