இயல்பு நீர் சேகரிப்பு நிலையத்தில் 2ம் கட்ட சுத்த நீர் சோதனை ஓட்டம் - கோவை மாநகர ஆணையாளர் ஆய்வு

தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 178 MLD கொள்ளளவு கொண்ட இயல்பு நீர் சேகரிப்பு நிலையத்தில் இரண்டாம் கட்ட சுத்த நீர் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்ட பில்லூர் -III ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டத்தின் ஒருபகுதியாக மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் ரூ.104.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 178 MLD கொள்ளளவு கொண்ட இயல்பு நீர் சேகரிப்பு நிலையத்தில் இரண்டாம் கட்ட சுத்த நீர் சோதனை ஓட்டம் (மருதூர் முதல் பன்னிமடை பிரதான நீர்தேக்கத்தொட்டி வரை) நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.



உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் பட்டன், ராதா, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...