கோவையில் பசியாறும் சோற்றில் விஜயகாந்த் முகம் வரைந்து ஓவியர் ராஜா அஞ்சலி செலுத்தினார்

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த் முகாம். அதனால், அவரது உருவத்தை வரைந்தேன் என்று ஓவியர் தெரிவித்தார்.


கோவை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, பசியாறும் சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார்.

மேலும் ஓவியர் ராஜா கூறுகையில் சோற்றில் விஜயகாந்த படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த்.

இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து அவருடைய திருருவத்தை ஓவியமாக வரைந்தேன் என்றும், இந்த ஓவியத்தை வரைய நான்கு மணிநேரம் எடுத்து வரைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...