ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.


கோவை: தொழில் முனைவோர்கள் மற்றும் புத்தாக்கக் கருத்துகளை வளர்ப்பதிற்கான சான்றாக, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வழங்கிய காலநிலைசார் தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 28.12. 2023) நடைபெற்ற கூட்டம் முக்கிய பங்கு வகித்தது.

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ஏஐசி ரைஸ் இந்த துறையின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர்கள்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்.

சின்க்ரோன் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீராம் சங்கரன், பயோஃப்பிள்-இன் தலைமை நிர்வாக அதிகாரி கிஷன் கருணாகரன் மற்றும் சர்க்கிள்எக்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் விஷ்ணுவரதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஓர் பகுதியாக ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு-ன் மிஷன் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதனுடன் ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் பங்குப் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...