அமராவதி முதலைப் பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணையின் முதலைப் பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில் அமராவதி அணை பகுதி அருகே கடந்த 1975 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலைப்பண்ணை துவக்கப்பட்டது.



இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர், தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமராவதி முதலை பண்ணை அருகே கரட்டுப்பதியில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுகுழு அமைக்கப்பட்டு, வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.

இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சூழல் கடை திறப்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திர குமார் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலைப் பண்ணையில் பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....