உடுமலை அருகே மலைவாழ் குடியிருப்புகளை பராமரிக்க வலியுறுத்தல்

ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் தரத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மலைவாழ் மக்களை குடி அமர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வரக்கூடிய குடியிருப்புகள் உள்ளது. இதில் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு திப்பி பாறை குடியிருப்பும் அடங்கும்.

இங்குள்ள மலைவாழ் மக்கள் பிளாஸ்டிக் காகிதங்களால் வேயப்பட்ட குடில்களில் குடியிருந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன் இயற்கை சீற்றத்தால் அவதிக்கு உள்ளாவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2020-21 ம் ஆண்டில் சாயப்பட்டறை அருகே உள்ள தம்புரான் நகரில் தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய 4 ரெடிமேடு வீடுகளுடன் 22 வீடுகள் கட்டப்பட்டது.

இந்த வீடுகளில் தற்போது மலைவாழ் மக்களின் 6 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மற்ற குடும்பங்கள் மேற்கு திப்பி பாறை பகுதியிலேயே இன்றளவும் வசித்து வருகின்றனர். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையை ஆதாரமாகக் கொண்டதால் மலைவாழ் மக்களால் இடம்பெயற முடியவில்லை. மேலும் அவர்களின் வாழ்வாதாரமான ஆடு,மாடு மேய்த்தல், இயற்கையாக விளையும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்தல் உள்ளிட்டவை புதிதாக வீடுகள் கட்டப்பட்ட பகுதியில் இல்லாததும் காரணமாகும்.



அத்துடன் அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளும் தரம் குறைந்தே காணப்படுகிறது. மழை பெய்யும் போது தண்ணீர் வழிந்து செல்லாமல் வீடுகளின் மேற்கூறையில் தேங்கி நிற்கிறது. இதனால் மேற்கூரையும் சேதம் அடைந்து அவை கட்டப்பட்டதற்கான நோக்கமும் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாயும் வீணாகி வருகிறது. அத்துடன் சூரிய சக்தி மின் விளக்குகளும் வீடுகளில் அமைக்கப்படவில்லை.

குடிநீர், தெரு விளக்கு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு செய்து தரப்படவில்லை. இதனால் தற்போது அங்குள்ள மலைவாழ் மக்களே அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அச்சமடைந்த மலைவாழ் மக்கள் அங்கு குடியேறுவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கட்டப்பட்ட வீடுகள் பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து சேதம் அடைந்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மலைவாழ் மக்களை குடி அமர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...