திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 10 சவரன் நகை வழிப்பறி செய்த நபர் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 59. இவர் தனது குடும்பத்தார் 13 பேருடன், திருப்பதி செல்வதற்காக ( பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனிடையே ஜன்னல் ஓரமாக நாகம்மாள் அமர்ந்து, உறவினர்களுடன் பேசிகொண்டிருந்த போது இந்தசந்தர்ப்பத்தை பயண்படுத்தி, ரயில்வே நடைமேடையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நாகம்மாள் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நாகம்மாள் திருப்பூர் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர்.



தொடர்ந்து அந்த நபர் திருப்பூர் கொடிகம்பம் பவானி நகர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...