குண்டடத்தில் உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பொங்கலூர் உழவர் 36 நிறுவனத்தின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சிவகாமி புவனேஸ்வரமூர்த்தி தலைமையில் குண்டடம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, குத்து விளக்கு ஏற்றி உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.



இலவச மின்சாரம், மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்குதல், இப்படி பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...