தாராபுரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் உட்பட இரண்டு பேர் கைது

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறுமியை ராஜேந்திரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த தாய், சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதன் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவரையும், கருகலைப்புக்கு உதவிய செவிலியரையும் தாராபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மூலனூரை அடுத்த எரகாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவரது தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-மாதங்களுக்கும் மேலாக அச்சிறுமியை ராஜேந்திரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதன் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரனிடம் அச்சிறுமியின் தாய் கேட்டபோது, கருவைக் கலைக்காவிட்டால் சிறுமியையும், அவரையும் கொலை செய்வதாக மிரட்டி உள்ளார்.

இதைத் தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் உஷாராணியை வீட்டுக்கு வரவழைத்து அவர் மூலம் சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 14-ஆம் தேதி சிறுமிக்கு கருகலைப்பும் ஏற்பட்டுள்ளது.



இந்த தகவல் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் குழந்தைகள் நல குழும உறுப்பினர் தாரணிக்கு கிடைத்துள்ளது. அவர் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ராஜேந்திரனையும், கருகலைப்பு உதவிய உஷாராணியையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சிறுமி கர்ப்பமானதை அடுத்து கருவைக் கலைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் உஷாரணியை அணுகி உள்ளார். அவரும் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கே வந்து சிறுமியை பரிசோதித்துவிட்டு கரு கலைப்புக்கான மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட சிறுமிக்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது ஜாதியைச் சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததற்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் தாராபுரம் மகளிர் போலீசார் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...