பொள்ளாச்சி நகர்மன்ற கூட்டத்தில் சாதிப்பெயரை பயன்படுத்திய உறுப்பினருக்கு எதிர்ப்பு

கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி திமுக நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.



அப்போது கூட்டத்திற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழி எடுப்பதற்கு ஆயுத்தமான போது திடீரென கூட்டத்திலிருந்து பட்டியலினத்தை சேர்ந்த திமுக நகரமன்ற உறுப்பினர்கள் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசினார்.



அவர் மீது இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நகர மன்ற கூட்டத்திலேயே நகரமன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசி உள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நீதிமன்றத்தில் நான்கு வாரத்திற்கு கைது செய்யக் கூடாது என இடைக்கால தடையாணை பெற்று கூட்டத்திற்கு வந்துள்ளார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களாகிய எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...