உடுமலை நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதி கடைகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், புகையிலை சமூக சேவகர் பிரவீன் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை, சுகாதார ஆய்வாளர்கள் சஞ்சய், தினேஷ் மற்றும் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கொண்ட குழு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...