ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆறு ஆக்கிரமிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.

நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86-வது வார்டு பூங்காநகர் பகுதியில் நொய்யல் நதியில் அத்துமீறி ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.



இதனைத்தொடர்ந்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வடக்கு வருவாய் ஆய்வாளர் உமாபாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சகாபுதீன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அக்குடோன் கட்டப்பட்டு வரும் பகுதியை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்நிலத்தினை சகாபுதீன் முறையாக வாங்கியுள்ளாரா அல்லது ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்க அந்நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.



இந்த ஆவணங்கள் மாநகராட்சி நில அளவையர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்பே நொய்யல் ஆற்றின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையது நமது நிருபரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாபுதீன் என்பவர் ஆத்துப்பாலம் அருகே உள்ள பூங்காநகரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நிலத்தினை ஆக்கிரமித்து தற்போது இரும்பு குடோன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சகாபுதீனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் இந்நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளதாகவும், அந்நிலத்திற்கு அவர் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

நொய்யல் ஆறு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி அந்த ஆற்றுப்படுகையில் இருந்து ஐந்து மீட்டர் தூரம் வரை மாநகராட்சி வசமே இருக்க வேண்டும். ஆனால், தற்போது சகாபுதீன் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியே கட்டிடம் கட்டி வருகிறார். இதற்கு எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் எழுகிறது. 



அந்த ஆவணங்களை காண நான் கேட்டதற்கும், அரசு தரப்பில்இருந்து கேட்டால் மட்டுமே காண்பிக்க முடியும் என்றும், வேறு யாரிடமும் அதனை காண்பிக்க முடியாது என்றும் அவர் கூறுவது மேலும் சந்தேகத்தை வழுப்படுத்துகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மீட்டுக்கொடுத்தால் போதும். எங்களது குழுவினரும், பூங்கா நகர் பகுதி மக்களும் இணைந்து அதனை தூர்வார தயாராக உள்ளோம்.



மேலும், இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கவணத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நொய்யலின் ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என ஓசை சையது கூறினார்.



Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...