கோவையில் ரேக்ளா பந்தயம் - 500 காளைகள் பங்கேற்பு

போட்டியில் வென்ற காளைகளுக்கு முதல் பரிசாக சக்கர வாகனம், இரண்டாம் பரிசாக ஒரு சவரன் தங்கம், மூன்றாம் பரிசாக 3/4 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


கோவை: தென் மாவட்டங்களான மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி போன்று, கோவை உள்ளிட்ட கொங்கு நாடு பகுதியில் பிரபலமாக இருப்பது ரேக்ளா. நாட்டு மாடுகளை ரேக்ளா வண்டியில் பூட்டி குறிப்பிட்ட தூரத்தை, குறைந்த நேரத்தில் எல்லையை கடக்கும் ரேக்ளா வண்டி காளைகள் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றனர்.



இந்த நிலையிலெ, கோவையில் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரேக்ளா அமைப்பினர் இணைந்து "காளையர் திருவிழா" என்ற தலைப்பிலெ, ரேக்ளா பந்தயம் நடத்தினர்.



தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க விழாவில் ஒன்றான ரேக்ளா பந்தயத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 500 காளைகள் களமிறங்கி போட்டியிட்டன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவில் நடந்த போட்டியில், ஜோடி மாடுகளை பூட்டிய ரேக்ளா வண்டிகள் புல்லட் வேகத்தில் றெக்கை கட்டி பறந்தன.

இதில் முதல் பரிசாக சக்கர வாகனம், இரண்டாம் பரிசாக ஒரு சவரன் தங்கம், மூன்றாம் பரிசு 3/4 சவரன் தங்கம், நான்காம் பரிசுக்கு 1/2 சவரன் தங்கம், ஐந்தாம் பரிசு 1/4 சவரன் தங்கம், ஆறு முதல் பத்தாம் இடம் பெற்ற காளைகளுக்கு 1 கிராம் தங்கம், முதல் 30 இடங்களை பிடித்த காளைகளுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசு அறிவித்தனர்.

இதுகுறித்து பேசிய ரேக்ளா காளை வளர்ப்பாளர்கள், காளை களத்தில் பரிசு வெல்வதனை விட, பந்தையத்தில் களமிறங்கி ஓடுவதே கெளரவம். இதற்காகவே காளைகளை வளர்க்கின்றோம். காளைகளுக்கு சத்தான உணவுகளான பருத்தி கொட்டை, புன்னாக்கு, போட்டி நேரங்களில் குளுக்கோஸ் உள்ளிட்டவை தருகின்றோம்.

நமது மண்ணின் பாரம்பரிய மிக்க இந்த ரேக்ளா எங்கு நடந்தாலும், அங்கு சென்று களமிறங்குவோம். வாரத்தின் விடுமுறை நாட்களில் பந்தையத்துக்கு செல்வோம். இதற்காக காளைகளுக்கு வழக்கத்தினை விட கூடுதலாக செலவழித்து திடகாத்திரமாக வளர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...