தாராபுரம் அருகே டிராக்டர் மோதி தையல் தொழிலாளி பலி - உறவினர்கள் போராட்டம்

டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி, அவர்களது உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் முருகன் (50). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள கரையூர் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.



முருகன் மீது டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி அவர்களது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஆரணை நடத்தினர். சம்பவம் குறித்து முருகனின் மனைவி தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி கரையூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

தையல் தொழிலாளி முருகனின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...