புத்தாண்டை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவியல் குவிந்துள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வால்பாறை சாலையில் ஆழியார் அணை ஒட்டி அமைந்துள்ளது குரங்கருவி எனப்படும் கவியரவி. இந்த அருவி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை, மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்து காணப்படுகிறது.



இந்த நிலையில் இன்று கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குவிந்துள்ளனர்.



மேலும் அருவியில் கொட்டி வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து உற்சாகமடைந்தனர்.



ஆனால் கவியருவியில் தடுப்பு சுவர் கம்பி போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால் அச்சத்துடன் அருவியில் குளிக்கும் நிலை இருப்பதாகவும், எனவே தடுப்பு கம்பிகள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வால்பாறை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...