பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்தின் பெயர் சூட்ட கோரிக்கை

தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மறைவிற்கு தமிழகம் முழுவதும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் விஜயகாந்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் தேமுதிக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், த.மா.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் விஜயகாந்த் மக்களுக்கு செய்த பல்வேறு சேவைகள், ஏழை எளிய மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவைகள் குறித்து புகழாரம் சூட்டி பேசினர்.



இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகன் அளித்த பேட்டியின் போது., விஜயகாந்த் திரைத்துறையில் பணியாற்றி காலங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். இதை நினைவு கூறும் வகையில் ராஜா மில் சாலையில் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி அருகே உள்ள ஒரு பகுதிக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும்,நகராட்சிக்கும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...