புத்தாண்டு விடுமுறையில் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர்.


கோவை: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு வந்த 2,400 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.



கோவை சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, பின்னர் சுற்றுலா வாகனத்தில் ஏறி குற்றாலம் அருவிக்கு சென்றனர்.



அப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரே நாளில் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர். அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்து இருந்ததால் வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...