உடுமலை அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து - ரூ.4 கோடி மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசம்

நூல் கண்டுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றி கொண்டது. கரும் புகையுடன் கூடிய தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். விபத்தில் குடோன் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாங்கிணர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் பஞ்சை கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நூல்கண்டுகள் குடோனில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கமாகும்.



இந்த சூழ்நிலையில் இன்று நூல் கண்டுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றி கொண்டது.



கரும் புகையுடன் கூடிய தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அதைத் தொடர்ந்து நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.



இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீரர்களால் அருகில் நெருங்க இயலவில்லை. அதைத் தொடர்ந்து சிறுக சிறுக முன்னேறி சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



பின்னர் சுமார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறைக்கு உதவும் வகையில் நிர்வாகத்தின் சார்பில் 15 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் நூற்பாலைக்கு கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து தீயணைப்பு வாகனத்துக்கு தண்ணீர் பரிமாற்றம் செய்யப்பட்டு தீயணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 4 கோடி மதிப்பிலான நூல் கண்டுகள் எரிந்து சாம்பலானது. மேலும் குடோன் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இது குறித்து தீயணைப்புத்துறை மற்றும் உடுமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள். உடுமலை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...