பீளமேடு பகுதியில் சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது. இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள காந்தி மாநகர் ஹட்கோ காலணியில் சரியாக மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளத்தில் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று சிக்கிக்கொண்டது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கோவையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது. காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது.

இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...