மறைந்த விஜயகாந்திற்கு தாராபுரத்தில் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்

தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த தே.மு.தி.க தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சி.எஸ்.ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் சாலை உடுமலை சாலை பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது.



தே.மு.தி.க நகரச் செயலாளர் ஷானவாஸ், மற்றும் தி.மு.க, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ். ம.தி.மு.க, திராவிட கழகத்தினர், தமிழ் புலி கட்சியினர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணியினர், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற கழகம், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...