வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் யானை தூங்கும் காட்சி வெளியீடு

தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது.



பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் உலாவும் யானைகளை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டியுடன் எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்தது. இதில் இரவு நேரத்தில் குட்டி யானை கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றது. அதை மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்த்தனர்.

அந்த தாய் யானையையும் குட்டி யானையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து உள்ளனர்.



தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும் குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி பதிவு செய்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...