பல்லடம் அருகே மாதப்பூர் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழா

மண்டல பூஜை விழாவில் வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.



19ஆம் நாளான இன்று ப.வடுகபாளையத்தை சேர்ந்த வைகோ பாலு-தனமணி குடும்பத்தார் மற்றும் லோகநாதன்- மாலதி குடும்பத்தாரின் ஏற்பாட்டில் மண்டல பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



விழாவின் தொடர்ச்சியாக வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.



இதன் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...