குள்ளம்பாளையத்தில் உள்ள தேங்காய் தொட்டி சுடும் ஆலைக்கு எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தேங்காய் தொட்டி சுடும் ஆலையில் வாட்டாட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார். புதுப்பிக்கும் பணி நடைபெற்றால், ஆலை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், இதுதொடர்பாக வரும் ஐந்தாம் தேதி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தேங்காய் தொட்டிகளை சுடும் ஆலை சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் கால்நடை மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ள காரணத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலை சிறிது காலம் மூடப்பட்டது.



இந்நிலையில் மீண்டும் அந்த ஆலை புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் ஆலை இயங்குவதாகவும் கோரி ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் இன்று முற்றுகையிட்டனர்.



விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் இன்று நேரில் அந்த ஆலையை ஆய்வு மேற்கொண்டார். ஆலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், வரும் ஐந்தாம் தேதி விவசாயிகள் மற்றும் ஆலை உரிமையாளருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் ஜனவரி 10ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...