வால்பாறை அட்டகட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

முகாமில் தொகுப்பு வீடு, கழிப்பறை, கல்வி கடன், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருக்கிறது. ஒன்னாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு உட்பட்ட கவர்கள், சக்தி, தலனார், ஊமையாண்டி முடக்கு, வாட்டர்பால்ஸ் ஆகிய எஸ்டேட் பகுதிகள் மற்றும் பழங்குடி கிராமம் பூனாட்சி, கீழ் பூனாட்சி, வெள்ளிமுடி, அப்பராளியார் போன்ற ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில் அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.



காலை 10 மணிக்கு துவங்கிய முகாம் 3 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் நகராட்சி பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வனத்துறை, ஆகிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



முகாமில் தொகுப்பு வீடு வேண்டும், கழிப்பறை வேண்டும், கல்வி கடன் வேண்டும், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்து குழந்தைகள் உதவித்தொகை,மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது இதில் 213 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வளிக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் நிரைமதி, வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் பெர்பெட்டி டெரன்ஸ் லியோ, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...