மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு

பிறந்து 2 வாரமே ஆனநிலையில், நடக்க முடியாமல் இருந்த யானைக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஆனால், உணவை எடுத்துக்கொள்ளாமல் இருந்த யானை குட்டி, இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தது.


கோவை: கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களேயான, யானை குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் நடக்க முடியாமல் யானை படுத்திருந்த தனியார் இடத்திற்கு வந்த மருத்துவர் பிறந்து 2 வாரமேயான யானைகுட்டி, முழுவளர்ச்சி இன்றி பிறந்துள்ளதாகவும், சோர்வாக இருந்த யானைக்கு குளுக்கோஸ் மற்றும் லேக்டோஜீன் கலந்த நீரை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் உணவை எடுத்துக்கொள்ளாமல், யானை குட்டி இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து குட்டி யானையின் உடலில் நகம் மற்றும் பற்காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ளதாக மருத்துவரின் முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குட்டி யானையை அப்பகுதியிலேயே வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...