பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முற்றுகை - நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்பு

பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனைக்கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள திருவள்ளுவர் திடலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து எந்த ஒரு அரசு அதிகாரிகளும் வரவில்லை எனக்கூறி இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பாக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திரண்டு திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து நகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சியில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, குப்பை சரிவர அள்ளுவதில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை, நகராட்சி அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் பெறுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...