கோவையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட இச்சிப்பட்டி காலனியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள், கமலாவதிபோஸ், கண்ணகிஜோதிபாசு, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.40-க்குட்பட்ட வீரகேரளம், ஆனந்தா நகரில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோகக் கடையை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்து, பொமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் பத்மாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட மகாராணி அவென்யூ பகுதியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் லட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...