பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மக்கள் நல பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி, மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிடம் மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்று மக்கள் நல பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: தமிழகத்தில் 33 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாநில அமைப்பு செயலாளர் ரத்னசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிடம் மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...