கரைப்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் - கணினிகள் வேலை செய்யாததால் மக்கள் அவதி

மக்களுடன் முதல்வர் முகாமில், சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றது.

இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள், வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் ஒரே இடத்தில் மக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.



புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வர்த்தக உரிமம், குடிநீர் இணைப்பு, பிறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பொருளாதார குற்றங்கள், நில அபகரிப்பு மோசடி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை, தொழில் பயிற்சி, நல வாரியங்களின் உறுப்பினர் பதிவு, உதவித்தொகை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவி திட்டம், கல்வி உதவித்தொகை, தாட்கோ கடன் உதவிகள், மகளிர் சுய உதவிக் குழு, கடன் உதவிகள் போன்ற பல்வேறு மனுக்களை கரைப்புதூர் ஊராட்சி மக்கள் மனுவாக அளிக்க வந்தனர்.



இந்நிலையில் மனுக்களை பதிவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சில கணினிகள் பழுதடைந்ததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.



நீண்ட நேரம் சிரமத்திற்கு பின் அதிகாரிகள் கனிணிகளை சரி செய்தனர்.



மேலும் சில துறைகளுக்கு வெறும் நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அலுவலகங்களில் கமிஷன் மற்றும் லஞ்சங்களை தவிர்க்கும் வகையில் இந்த முகாம் போடப்பட்டுள்ள நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...